Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Exchange Rate: ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி...!



அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (22) மேலும் குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 295.10 ரூபாவாகவும், 303.79 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் (21) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது முறையே 294.67 ரூபாவாகவும், 303.32 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

வளைகுடா நாணயங்கள் உட்பட ஏனைய பிரதான வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு நிகராகவும் இலங்கை ரூபாயும் பெறுமதி இன்று குறைந்துள்ளது.



Post a Comment

0 Comments