Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்...!



இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகமாக ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் சேவைக்காலம் நிறைவடைவதால் குறித்த பதவிக்கு சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இலங்கை கல்வி நிர்வாக சேவையில் சிறப்பு தர அதிகாரியாக உள்ளார்.

பிரதமரின் முன்மொழிவின் அடிப்படையில் வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments