Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடம்: மர்சூக் மஸாமிலா ரோஸுக்கு சிறப்புப் பாராட்டு…!



காத்தான்குடி மீராபாளிக்கா தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி மர்சூக் மஸாமிலா ரோஸ், 2024ஆம் ஆண்டு உயர் தர (A/L) பரீட்சையில் வணிகத்துறையில் சிறப்பாக தேர்ச்சி பெற்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றார். 

இந்தச் சாதனைக்கு அங்கீகாரம் தெரிவித்து, பாடசாலை சமூகத்தின் ஒருங்கிணைப்பில் நேற்று (22) சிறப்பு கௌரவ நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் போது, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மர்சூக் மஸாமிலாவின் கல்விச் சாதனையை பாராட்டி, மலர் மாலை, நினைவுப்பரிசுகள் மற்றும் வாழ்த்துகளுடன் கௌரவித்தனர்.

பாடசாலையின் கல்வி தரத்தையும், மாணவர்களின் திறனைவும் வெளிக்கொணரும் வகையில் மர்சூக் மஸாமிலா நிலைநாட்டிய இந்த சாதனை, இளம் தலைமுறைக்கு மெய்யான முன்மாதிரியாக இருக்கிறது என நிகழ்வில் பேசுபவர்கள் தெரிவித்தனர்.

மர்சூக் மஸாமிலா தனது வெற்றிக்கு வழிகாட்டிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார். எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த கல்வி இலக்குகளை நோக்கி பயணிக்க விழையும் தனது திட்டங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

– எம்.எஸ்.எம். சஜீ

Post a Comment

0 Comments