
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி ஆயுததாரிகளால் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள்.
இந்நிலையில், எல்லை கடந்த ஆயுததாரிகளுக்கு ஆதரவு அளித்தமைக்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ஈரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தெரிவித்த போது, இராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம்.
பாகிஸ்தானியர்களின் உயிரை பறித்ததற்கு தக்க பதிலடி தரப்படும். தான் விரும்பும் நடவடிக்கையை எடுக்க இராணுவத்திற்கு முழு அதிகாரம் தரப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதனால், ஆயுததாரிகளின் இலக்குகளை குறி வைத்து, இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி உள்ளது தெரிய வந்துள்ளது.
0 Comments