Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சிங்கப்பூர் - ஹொங்கொங்கில் மீண்டும் கொரோனா தொற்று...!



சிங்கப்பூர், ஹொங்கொங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டில் உலக நாடுகளை ஆட்டுவித்த கொரோனா வைரஸ் தொற்றை யாரும் மறந்துவிட முடியாது. அதன் பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம்.

உலகின் பெரும்பாலான நாடுகள் மறந்துவிட்ட கொரோனா தொற்று தற்போது சிங்கப்பூர், ஹொங்கொங்கில் அதிவேகமாக பரவி வருகிறது.

ஹொங்கொங்கின் முக்கிய பகுதிகளில் கொரோனா பாதிப்பு புதிய அலையாக உருவெடுத்துள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறி உள்ளனர். அங்கு தற்போதுள்ள கொரோனா தொற்று சதவீதம் 11.4 ஆகும். இதுவே கடந்த மார்ச்சில் 1.7 சதவீதமாக இருந்தது.

பரிசோதனை மாதிரிகளில் பெரும்பாலானவற்றில் தொற்றுகள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.

ஹொங்கொங் நிலைமை இப்படி இருக்க சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மே 3ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில், 14,200 பேருக்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை கூறி உள்ளது. இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Post a Comment

0 Comments