Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கடவுச்சீட்டு சேவை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு...!



கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு வருகைதரும் பொதுமக்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

திங்கட்கிழமை (02) முதல் அமுலுக்கு வரும் வகையில், அதன் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி 24 மணி நேர ஒரு நாள் கடவுச்சீட்டு சேவை நாளை (30) முடிவடையவுள்ளது.

அதற்கமைய, திங்கட்கிழமை (02) முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்தில் ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான விண்ணப்பங்கள் முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல் 2மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

பிராந்திய அலுவலகங்களில் முன்னர் போன்றே முற்பகல் 7 மணிமுதல் பிற்பகல்2 மணிவரை சாதாரண சேவை மற்றும் ஒருநாள் சேவையின் கீழ் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் சமிந்த பத்திராஜ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments