Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கட்டார் டிரம்பிற்கு வழங்கிய விமானத்தை சொந்தமாகியது அமெரிக்க அரசு...!



கட்டாரிலிருந்து டிரம்பிற்கு பரிசாக வழங்கப்பட்ட விமானத்தை ஏற்றுக்கொண்டது.

கட்டார் அரசு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு நன்கொடையாக வழங்கிய விமானத்தை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானப் பயணமான எயார் போர்ஸ் ஒன்றுக்கு கட்டார் அரசு ஒரு போயிங் 747 விமானத்தை பரிசாக வழங்கியது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட அமெரிக்க பாதுகாப்பு செயலாளர், அனைத்து சட்ட விதிமுறைகளின்படியும் கேள்விக்குரிய விமானத்தை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகக் கூறினார்.

இருப்பினும், ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ விமானப் பயணமான எயார் போர்ஸ் ஒன்றுக்குப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, விமானத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கட்டார் அரச குடும்பத்தினரால் அமெரிக்க ஜனாதிபதிக்கு பரிசாக வழங்கப்பட்ட இந்த விமானம் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புடையது, மேலும் டொனால்ட் ட்ரம்பின் பதவிக் காலத்திற்குப் பிறகு அவரது நூலகத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments