Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: ஜனாதிபதி அலுவலக வாகனங்களின் ஏல விற்பனை குறித்து முறைப்பாடு...!



ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுவர்ணபூமி தேசிய இயக்கத்தினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கை கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது 26 வாகனங்கள் ஏலமிடப்பட்ட நிலையில், அவற்றில் 17 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments