Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



10 ஆண்டுகளின் பின் வெடித்த இத்தாலியின் புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை...!



இத்தாலியின் (Italy) சிசிலி தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற மவுண்ட் எட்னா எரிமலை திடீரென வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த அனர்த்தம் நேற்று முன்தினம் (02) இடம்பெற்றுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில், எரிமலை வெடித்ததால் அருகிலுள்ள பகுதிகளில் இருந்த சுற்றுலாப் பயணிகள் பயந்து ஓடியதாக காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, தகவலறிந்து மீட்புப்படையினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

இதன்பின்பு, சுற்றுலாப் பயணிகள் மற்றும் அருகில் உள்ள கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

எரிமலையிலிருந்து ஆபத்தான வாயுக்கள் வெளியேறி வருவதுடன் சில மணிநேரங்களாக எரிமலையிலிருந்து சாம்பல் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால், மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments