
உடன் அமுலுக்கு வரும் வகையில் 12 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தடை விதித்துள்ளார். இதற்கான உத்தரவில் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
12 நாடுகளுக்கு முழுமையான பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 7 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்குள் வருவது தொடர்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஆப்கானிஸ்தான், ச்சட், கொங்கோ, கினியா, எரித்ரியா, ஹயித்தி, ஈரான், லிபியா, மியன்மார், சோமாலியா, சூடான் மற்றும் யேமன் ஆகிய நாடுகள் பயணத் தடைக்கு உள்ளாகியுள்ளன.
இதேவேளை புருண்டி, கியூபா, லாவோஸ், சியாரா லியோன், டொங்கோ, டெர்கிமினிஸ்டன் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு அமெரிக்காவிற்கு வருவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய ஆர்வத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 9ம் திகதி அமுலுக்கு வரும் வகையில் தடை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments