Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



காத்தான்குடி ஆற்றில் சிறுவன் ஒருவர் நீரில் தவறி விழுந்து சடலமாக மீட்கப்பட்டார்...!



காத்தான்குடி-05, ஊர் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆற்றங்கரை பகுதியை நோக்கி நடந்து தனியாக சென்றுள்ளார்.

காத்தான்குடி ஆற்றங்கரை கரையில் சென்று நின்றபோது, தவறிய சிறுவன் நீரில் விழுந்து உயிரிழந்தார்.

சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.

இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியை அண்மித்த காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

இதனை வைத்து கொண்டு பிரதேச இளைஞர்கள் ஆற்றில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

காத்தான்குடி ஊர் வீதியை சேர்ந்த 6 வயதுடைய சுலைம் அப்துல்லாஹ் என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


(BATTI SAJEE - 0779358666)
காத்தான்குடி-

Post a Comment

0 Comments