
இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் எட்டப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதேவேளை, நேற்றைய தாக்குதலில் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உதவிப் பொருட்களைத் தேடி பட்டினியால் வாடும் பாலஸ்தீனியர்களை “வேண்டுமென்றே சுட” படையினருக்கு உத்தரவிடப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியான தகவல்கள், காசாவில் “போர்க்குற்றங்களுக்கு” மேலும் சான்றாகும் என காசாவின் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் போரில் இதுவரை குறைந்தது 56,331 பேர் கொல்லப்பட்டதுடன் 132,632 பேர் காயமடைந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
0 Comments