Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; உயர்ஸ்தானிகர் வலியுறுத்தல்...!



பயங்கரவாதத் தடை சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.

தமது விஜயத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக கொழும்பில் நேற்று மாலை ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கைதிகள் குறித்து விரைவாக மதிப்பாய்வு செய்து அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments