ஸ்லிம் சமூகத்தின் வருடாந்த மாநாடு நிறைவு பெற்றுவிட்டது. உலகின் 180 நாடுகளில் இருந்து 16 இலட்சத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பியிருக்கிறார்கள்.
எந்தவித முறைப்பாடுகளும் முறைகேடான செயற்பாடுகளும் இன்றி அமைதியாக இம்மாநாடு முடிவடைந்திருப்பது இஸ்லாம் அமைதியின், சமாதானத்தின் மார்க்கம் என்பதை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் இஸ்லாத்தின் சமாதானத் தூதை தத்தமது நாடுகளுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.
நபிகளாருடைய இறுதி ஹஜ்ஜில் ஒன்று கூடியிருந்தவர்களை நோக்கி அரஃபாவில் நபியவர்கள் உரையாற்றும் போது, “ஓ மக்களே! எனக்குப் பிறகு எந்த நபியும் அல்லது தூதரும் வரமாட்டார்கள், புதிய மார்க்கமொன்று பிறக்கப் போவதுமில்லை.. எனவே, ஓ மக்களே! நான் உங்களுக்குக் கூறும் வார்த்தைகளை நன்கு கவனத்தில் எடுங்கள்.

நான் எனக்குப் பின்னால் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன், அது அல் குர்ஆனும் சுன்னாவுமாகும், இவற்றை நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் நீங்கள் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்.”
“இங்கு எனது உரையைக் கேட்கும் அனைவரும் என் வார்த்தைகளை மற்றவர்களுக்கும், அவர்கள் அவர்களுக்கு அடுத்தவர்களுக்கும் எத்தி வைக்கட்டும். மேலும், பிந்தையவர்கள் என் வார்த்தைகளை நேரடியாகக் கேட்பவர்களை விட நன்றாகப் புரிந்துகொள்ளட்டும்.”
இந்த வார்த்தைகளைக் கேட்ட கூடியிருந்த ஸஹாபாக்கள் தமது ஒட்டகத்தின் முகம் எங்கு திரும்பியிருந்ததோ அந்தந்தச் திசையில் நபியவர்களின் தூதை எத்தி வைப்பதற்காக பரவிச் சென்றார்கள் என வரலாறு கூறுகிறது. அரேபிய தீபகற்பத்திலிருந்து இஸ்லாம் உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் செல்வதற்கு இவர்கள் காரணமாக இருந்தார்கள்.

இவர்கள் எத்திவைத்த தூதை ஏற்றுக் கொண்டவர்கள், நபியவர்கள் தமது தூதை தமக்கு எத்தி வைத்து விட்டார்கள் என்பதற்குச் சாட்சியாக அரபாவிலே ஒன்று கூடுகிறார்கள்.
இந்த வகையில் ஹஜ்ஜின் முக்கிய கடமையாகிய அரபாவில் ஒன்றுகூடிய அனைவரும் நபியவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது அரபாவில் ஒப்படைத்த பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பிருக்கிறது. நபியவர்கள் உலகுக்குப் போதித்த சமாதானத்தின் தூதுவர்களாக செயல்பட வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது.
மக்களிடையே ஸலாத்தை, அமைதியை, சமாதானத்தைப் பரப்புங்கள் என்பது நபியவர்களுடைய போதனையாகவிருக்கிறது. முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் சமாதானமாக வாழ்வது உலக சமாதானத்தை கட்டியெழுப்புவதில் முக்கியமானது. அதற்கு முதற்படியாக முஸ்லிம்கள் தமக்கு மத்தியில் ஸலாத்தைப் பரப்ப வேண்டும் என்று நபியவர்கள் ஏவியிருக்கிறார்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் ஸலாம் கூறுங்கள் (ஆதாரம்: புஹாரி) என்ற ஏவல், தமது குடும்பத்தார், தமது ஜமாஅத்தார், தமது கொள்கை சார்ந்தார் என்ற வட்டத்தைத் தாண்டி தமக்கு அந்நியமானவர்களுக்கும் ஸலாம் சொல்லி உறவை ஆரம்பிக்குமாறு நபியவர்கள் போதித்திருக்கிறார்கள். நபியவர்களின் தூதை அடுத்தவர்களுக்கு எத்தி வைப்பதற்கு முன்னர் முஸ்லிம் சமூகம் தமக்கிடையே ஸலாத்தைப் பரப்ப வேண்டும் என்பதே நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலாகும்.
கூடியிருந்த ஸஹாபாக்களிடம் நபியவர்கள் ஒருமுறை, நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள், நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டாதவரை ஈமான் கொள்ள மாட்டீர்கள். உங்களிடையே அன்பை உருவாக்கும் ஒரு செயலை நான் உங்களுக்குக் காட்டட்டுமா? உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள் என்று கூறினார்கள்.
எனவே உலகில் சமாதானத்தை பரப்ப முன்னர் முஸ்லிம்கள் அதனை தமக்கிடையே பேண வேண்டியவர்களாக உள்ளனர்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்லுகிறீர்கள்?அல்லாஹ்விடம் மிகவும் வெறுப்புக்குரியது நீங்கள் செய்யாததை அடுத்தவருக்குச் சொல்வதாகும் (ஸூரத்துஸ் ஸப் 4,5) என அல்லாஹுத்தஆலா கூறுகின்றான். நபியவர்கள் முன்வைத்த உலகுக்கான சமாதானத் தூதை எத்தி வைக்குமாறு முஸ்லிம்கள் அல்லாஹுத்தஆலாவினால் ஏவப்பட்டிருக்கிறார்கள் அதனால் அல்லாஹுத்தஆலாவின் வெறுப்புக்கு ஆளாகாத வகையில் முஸ்லிம்கள் முதலில் தமக்கிடையே சமாதானமாக வாழ வேண்டியிருக்கிறார்கள்.
சமாதானமாக வாழ்வதற்கான பயிற்சி வழங்கும் களமாக ஹஜ் அமைந்திருக்கிறது. ஹஜ் பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது “ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட சில மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் உடலுறவு, பாவச் செயல்களில் ஈடுபடுவது, வாதாட்டம் செய்வது கூடாது” (சூரத்துல் பகரா :197) எனக் குறிப்பிடுகின்றான்.
இந்த வகையில் சமாதானத்தைச் சீர்குலைக்கும் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதற்கான பயிற்சியை ஹஜ் வழங்குகின்றது. எனவே சமாதானத் தூதுவர்களாகச் செயற்பட வேண்டிய ஹாஜிகள், வீணான விவாதங்கள், வாதாட்டங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல், நபிகளாரின் தூதை ஏத்தி வைக்கின்ற அவர்களது பணியைச் செய்வதற்கு இன்றியமையாததாகின்றது.
சமாதானத்தின் பக்கம் அழைப்பவர்கள் சமாதானத்துக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என நபியவர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள். எவருடைய நாவிலிருந்தும் கைகளில் இருந்தும் ஒருவர் பாதுகாப்புப் பெறவில்லையோ அவர் எம்மைச் சேர்ந்தவரல்ல (ஆதாரம்: புஹாரி).என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில், யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசிக்கிறாரோ அவர் பேசினால் நல்லதைப் பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும் எனவும் நபியவர்கள் உபதேசித்திருக்கிறார்கள். மேலும் மக்கள் தமது உயிர் மற்றும் செல்வம் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியுமானவரே உண்மையான விசுவாசியாவார் .” (ஆதாரம்: சுனன் அல்-நஸாயி) எனவும் நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிமுடைய மானம் இன்னொரு முஸ்லிமுக்கு ஹராமாகும் என நபி(ஸ்ல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் முஸ்லிமை அவமானப்படுத்தும் வகையில் செயல்படுவது அமைதியான, சமாதானமான சமூக வாழ்வை கெடுத்து விடுவதாக அமையும் என்பதால் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் படி முஸ்லிம்கள் ஏவப்பட்டுள்ளார்கள்.
நரக நெருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைய வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர், மக்கள் தன்னை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ, அது போலவே அவர் மக்களையும் நடத்தட்டும்.”
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
“உங்களில் ஒருவர் தனக்காக விரும்புவதைத் தனது சகோதரனுக்கும் விரும்பும் வரையில் உண்மை முஸ்லிமாக மாட்டார்”
(ஆதாரம்: நாற்பது ஹதீஸ்-நவவி)
போன்ற ஹதீஸ்களும் அமைதியான சமாதானமான வாழ்க்கைக்கான போதனைகளாக உள்ளன.
நபியவர்கள் அரபாவிலே முன்வைத்த பணியை ஏற்று நபித்தோழர்கள் நபியவர்களின் சமாதானத்தூதை முன்வைத்து எமக்கு வாரிசாக வழங்கிய பணி, அந்த ஸஹாபாக்கள் தமது பணியைச் செய்து விட்டார்கள் என்று அரபாவிலே ஒன்று கூடி சாட்சியமளித்தவர்களுக்கு மட்டுமன்றி, அவர்களின் தூது யாருக்கெல்லாம் கிடைத்ததோ அவர்கள் அனைவர் மீதும் பகிரப்பட்டிருக்கிறது. இந்தப் பணியை ஏற்று உலகில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக வருகின்ற புத்தாண்டில் அல்லாஹ்வுடைய பிரதிநிதிகள் தம்மை அதற்காகத் தயார் படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட அழகிய சொல்லை உடையவர் யார்?” (அல் குர்ஆன் 41:33) என அல்லாஹுத்தஆலா கேட்கிறான். அந்த வகையில் மக்களை நபியவர்களின் சமாதானத் தூதின் பால் அழைப்பவர்களே சிறந்த முஸ்லிம்கள் என்பது தெளிவாகிறது.
-பியாஸ் முஹம்மத்-

0 Comments