
2025 ஜூன் மாதத்தின் முதல் 10 நாட்களில் 43,962 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,073,765 என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 43,962 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.
0 Comments