Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு சில மாதபின்னடைவே - முற்றாக அழிக்கப்படவில்லை - பென்டகன்



ஈரானின் அணுஉலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டம் முற்றாக அழிக்கப்படவில்லை சில மாதபின்னடைவை சந்தித்துள்ளது என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

போர்டோ நட்டன்சா மீதான அமெரிக்காவின் தாக்குதலால் அமெரிக்கா எதிர்பார்த்த அளவிற்கு சேதம் ஏற்படவில்லை என அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

ஈரான் அமெரிக்க தாக்குதலிற்கு முன்னரே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அங்கிருந்து அகற்றவிட்டது என பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் குண்டுவீச்சினால் ஈரானின் அணுஉலைகளில நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை என பென்டகன் தெரிவித்துள்ளது.

இலக்குவைக்கப்பட்ட அணுஉலைகளின் வாயில்கள்குண்டுவீச்சினால் மூடப்பட்டுள்ளன,நிலத்தடியில் இருந்த கட்டிடங்கள் அழிக்கப்படவில்லை,ஈரானின் அணுசக்தி திட்டம் ஆறுமாதகால பின்னடைவை சந்தித்துள்ளது என பாதுகாப்பு புலனாய்வு முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments