Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Update: முகக்கவசத்துக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு கோரிக்கை...!



நாடு ஒரு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.

ஊடக சந்திப்பில் உரையாற்றிய சம்பத், தற்போதைய சந்தை விலைகளின் படி, ஒரு முகக் கவசம் 50 ரூபாவாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலையை ரூ.10 ஆகக் குறைக்க வேண்டும் என்று கோரினார்.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பே விலை உயர்வுக்குக் காரணம் என்று உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த விடயத்தின் தாமதமின்றி தலையிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சம்பத் வலியுறுத்தினார்.

Post a Comment

0 Comments