
இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து ஈரான் நூற்றுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் எவ்வி டெவ்ரின் தெரிவித்துள்ளார்.
ஈரான் சுமார் 100 ஆளில்லா விமானங்களை இஸ்ரேலை நோக்கி செலுத்தியுள்ளது அவற்றை செயல்இழக்க செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொதுமக்களிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் விதத்தில் ஈரான் பதில் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடும் என இஸ்ரேலின் இராணுவதளபதி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காகவே ஒப்பரேஷன் ரைசிங் லயன் நடவடிக்கையை முன்னெடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்
எனினும் இஸ்ரேலிய மக்களே என்னால் வெற்றி குறித்து வாக்குறுதியளிக்க முடியாது,ஈரான் ஆட்சியாளர்கள் பதில் தாக்குதலை மேற்கொள்வார்கள் அதனால் ஏற்படும்உயிரிழப்புகள் நாங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments