Trending

6/recent/ticker-posts

Live Radio

மாணவர் விழுந்த சம்பவம் : சாரதி மற்றும் நடத்துனரின் அலட்சியே காரணம்...!



வடமேல் மாகாணத்தில் நேற்று (03) பதிவான சிசுசெரிய வகை பாடசாலை பேருந்து விபத்துக்கான விசாரணையில், சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியான செயல்பாடுகளே விபத்துக்குக் காரணம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வீதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பேருந்தின் மிதி பலகையில் இருந்த மாணவர் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இது குறித்து உரிய தரப்பு கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையினூடாக தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments