Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இந்தியா, இலங்கைக்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதியுதவி...!



இந்தியா, இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான நிதி நிவாரணத்தை வழங்கியுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுக்கு இடையேயான சிறப்புப் பரிமாற்ற ஏற்பாட்டின் கீழ், மீதமுள்ள நிலுவைத் தொகையைப் புதுப்பித்து, இந்த 1 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி நிவாரணத்தை இந்தியா வழங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் மொத்த அதிகாரபூர்வ இருப்பு, 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் தற்போதைய உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து, இலங்கைக்கு இந்தியா வழங்கும் மொத்த உதவி 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இதில் 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான மானியங்கள் அடங்குகின்றன.

Post a Comment

0 Comments