Trending

6/recent/ticker-posts

Live Radio

நாட்டில் பல பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு...!



மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்று (09) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் சில இடங்களில் சாதாரண மழை பதிவாகலாம் எனவும், மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அந்த திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை வேகமுள்ள காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூடிய வானம் மற்றும் காலநிலை மாற்றங்களை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments