
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் குழு ஒன்று இன்று (16) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தது.
அதன்படி, லக்ஷ்மன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா, ரஞ்சித் மதும பண்டார, மற்றும் எஸ்.எம். மரிக்கார் உள்ளிட்ட பல ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளான உதய கம்மன்பில மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி (TPA) தலைவர் மனோ கணேசன் ஆகியோரும் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை வந்தனர்.
அதேநேரம், சட்டவிரோதமாக ஒன்று சேர்க்கப்பட்ட (Assembled) வாகனம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) அண்மையல் வாக்குமூலம் பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவும் இன்று நீதிமன்றில் முன்னிலையாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments