Trending

6/recent/ticker-posts

Live Radio

வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் எச்சரிக்கை...!



போலி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி, வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்து, அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளையிடும் மோசடி முயற்சிகள் குறித்து தற்போது அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) தெரிவித்துள்ளது.

இந்த மோசடி செய்பவர்கள் பயனர்களை ஏமாற்றி வாட்ஸ்அப் ஓடிபி எண்களைப் பெற்று போலி செய்திகளை அனுப்பி மோசடி செய்து வருவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்படி, இந்த மோசடி குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தினர்.

ஆன்லைன் கணக்குகளுக்கான ஓடிபி எண்களை எந்த சூழ்நிலையிலும் யாருடனும் பகிரக்கூடாது என்றும் அவர்கள் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments