
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிப்பதற்கு பிரான்ஸ்ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தீர்மானித்துள்ளதை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்கா இது 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி ஹமாசினால் கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அறையும் செயல் என குறிப்பிட்டுள்ளது.
இமானுவேல் மக்ரோனின் அறிவிப்பிற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
கண்மூடித்தனமான செயல் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் பிரான்ஸ் ஜனாதிபதியின் யோசனையை அமெரிக்கா நிராகரிக்கின்றது என மார்க்ரூபியோ தெரிவித்துள்ளார்.
சமாதானத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தும் ஹமாசின் பிரச்சாரத்திற்கு இது உதவும், ஒக்டோபர் ஏழாம் திகதி பலியானவர்களின் முகத்தில் அறையும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments