Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்...!

காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது.

இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு ஜூலைமாதத்தின் பின்னர் மூன்று மருத்துவசுகாதார பணியாளர்களை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக இஸ்ரேல் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது.

பலசுகாதார மருத்துவ பணியாளர்கள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதிகளில் வைத்து இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவத் அல்செர் இவர்களை வெளியுலக தொடர்பின்றி பல மாதங்களாக தடுத்துவைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

அவர்களிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இஸ்ரேல் மறுக்கின்றது,அவர்கள் மிகமோசமான விதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவசுகாதார பணியாளர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என இஸ்ரேல் வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளை காசாவில் மருத்துவ ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பசிபட்டினி ஊட்டச்சத்து குறைபாடு காயமடைந்தவர்களிற்கு மருத்துவகிசிச்சைவழங்க முடியாத அளவிற்கு அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கார்டியனிடமும்,புலனாய்வு இதழியலிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.அவர்கள் தாங்கள்தாக்கப்பட்டதாக சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவனையின் இயக்குநர் மருத்துவர் ஹ_சாம் அபு சபியாவும் ஒருவர்.அவர் கடந்த டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார்.

அவர் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார், அவரது உடல்நிலை மோசமடைகின்றது என இந்த வாரம் அவரது சட்டத்தரணிகள் ஸ்கைநியுசிற்கு தெரிவித்திருந்தனர்.

Post a Comment

0 Comments