Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



#BREAKING தவெக முதலமைச்சர் வேட்பாளராக விஜய் தேர்வு..!



தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று ( வெள்ளிக்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1200 பேருக்கு மட்டுமே நுழைவு அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தனர். காலை செயற்குழு கூட்டத்திற்கு வந்த தவெக தலைவர் விஜய், கட்சியின் கொள்கை தலைவர்களுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

 அப்போது செயற்குழு கூட்டத்தில் தொடக்க உரையாற்றிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், “தமிழக வெற்றி கழகம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறது. இனி வரும் ஒவ்வொரு நாட்களையும் ஒவ்வொரு நிமிடத்தையும் தலைவருக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் செலவிட வேண்டும். வரலாற்று சிறப்பு மிக்க முடிவுகள் இன்று வெளியாகும்.. தலைவர் விஜய்யை தமிழக மக்கள் மாற்று சக்தியாகவும், நம்பிக்கையாகவும் பார்க்கின்றனர். அவரது எதிர்ப்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். தலைவர் விஜய்யிடும் கட்டளைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

இந்த செயற்குழு கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி,

*விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு முன் இரண்டாவது மாநில மாநாடை நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

*ஆகஸ்ட் மாதம் 3ஆம் வாரத்தில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27 ல் நடந்ததை போல மிக பெரிய மாநாட்டை நடத்த முடிவு செய்துள்ளனர். திருச்சி அல்லது மதுரையில் இந்த மாநாட்டை நடத்த செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

*5 மண்டலம், 120 மாவட்டங்கள் ,12500 கிளைகழகங்களில் கட்சியின் கொள்கை விளக்க கூட்டத்தை நடத்த தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

*ஜூலை இரண்டாம் வார இறுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியை தொடங்க வேண்டும். செப்டம்பர் முதல் டிசம்பர் வரை கட்சித் தலைவர் மக்கள் சந்திப்பு நடத்த வேண்டும்.

*வீட்டிற்கு ஒருவர் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு தெருவிலும் இரண்டு பேர் கட்சியை நிர்வாகியாக இருக்க வேண்டும் உள்ளிட்ட வகையில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என செயற்குழு கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் கட்சியின் தலைவர் விஜய் தேர்ந்தெடுக்கப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments