
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது.
குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது.
இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.
இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்களை நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம்.
இது ஒரு முக்கிய விமான நிலையமாக இல்லாவிட்டாலும், மாற்று விமான நிலையமாக இது அவசியம்.
விமான பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கு விமான நிலையத்தைப் பயன்படுத்தவும், பிரதான விமான நிலைய வளாகத்திற்கு வெளியே உள்ள நிலத்தை சூரிய மின்சக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது என்றும் கூறினார்.
நேற்று மத்தள விமான நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
0 Comments