Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



Updates: தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலி இன்று அறிமுகம்...!



தமிழக வெற்றிக் கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை, அதன் தலைவர் விஜய் இன்று (30) வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாகக் கால்பதித்துள்ள தமிழக வெற்றி கழகம் , மக்கள் மத்தியில் தங்கள் ஆதரவுத் தளத்தை விரிவாக்கும் நோக்கில் புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கைச் செயலி (Membership App) இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜய், சென்னை, பனையூரில் உள்ள தனது இல்லத்தில் நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில் இந்தச் செயலியை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்தச் செயலியானது, தமிழகம் முழுவதும் உள்ள ஆர்வலர்களும், ஆதரவாளர்களும் எளிதில் தமிழக வெற்றி கழகத்தில் உறுப்பினராக இணைந்துகொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த செயலி அறிமுக நிகழ்வின்போது, கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய்யின் மக்கள் இயக்கப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தச் செயலியின் மூலம், பொதுமக்கள் தங்கள் தொலைபேசிகளிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இந்தச் செயலி மூலம் பெருமளவிலான இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் கட்சியில் இணைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி, பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை அவர் தொடங்கினார்.

இந்தச் செயலி அறிமுகம், தமிழக அரசியலில்தமிழக வெற்றி கழகத்தின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

இதேவேளை, தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சேர்க்கும் நோக்கில் குறித்த செயலி வெளியிடப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

Post a Comment

0 Comments