
அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், ‘வெர்டிஸ்’ என்ற சிறிய நாட்டை உருவாக்கி அதன் தலைவராகியுள்ளார்.
குரோஷியா மற்றும் செர்பியாவுக்கு இடையில், டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள 125 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தில், “வெர்டிஸ் குடியரசு” என்ற புதிய நாட்டை டேனியல் ஜாக்சன் என்ற அந்த 20 வயது அவுஸ்திரேலிய இளைஞர் உருவாக்கி, தன்னை அதன் தலைவராக அறிவித்துள்ளார்.
இந்த நிலப்பகுதிக்கு எந்த நாடும் உரிமை கோரவில்லை என்பதை அறிந்து, 2019 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி இந்த நாட்டை அவர் உருவாக்கினார். இந்த புதிய நாட்டுக்கு தனிக் கொடி, அமைச்சரவை, நாயணம் மற்றும் 400 குடிமக்கள் உள்ளனர். ரொய்ட்டர்
0 Comments