Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



கிணறொன்றிலிருந்து மாணவி ஒருவரது சடலம் மீட்பு...!



கிணறொன்றிலிருந்து மாணவி ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

2025ஆம் ஆண்டு உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவி, வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று , நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், பெற்றோரும் உறவினர்களும் அவரைத் தேடியுள்ளனர்.

தேடுதலின்போது, மாணவியின் புத்தகப்பை மற்றும் துவிச்சக்கர வண்டி கல்வி நிலையத்தில் காணப்பட்டுள்ளது .

மேலும், நிலைய வளாகத்தில் உள்ள கிணற்றருகே மாணவியின் செருப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது .

இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர் .

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், மாநகர சபையினர், கிராம அலுவலர், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டு, மாலையில் மாணவியை சடலமாக மீட்டுள்ளனர் .

சடலமாக மீட்கப்பட்டவர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும், வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியாவார்.

மாணவியின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments