Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



நியூயோர்க் ஐ.நா. கூட்டம் பாலஸ்தீன ஜனாதிபதியின் பங்கெடுப்பை தடுத்த அமெரிக்கா...!



அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்கு பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உலகத் தலைவர்களின் கூட்டத்திற்காக பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கிற்கு வர அனுமதிக்கப் போவதில்லை என்று அமெரிக்கா வெள்ளிக்கிழமை (29) தெரிவித்துள்ளது.

பல அமெரிக்க நட்பு நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் மேற்குக் கரையை தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆணையத்தின் உறுப்பினர்களிடமிருந்து விசாக்களை மறுத்து இரத்து செய்யும் முடிவால் அப்பாஸ் மற்றும் சுமார் 80 பாலஸ்தீனியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வெளிவிவகார துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூயோர்க்கின் மன்ஹாட்டனில் நடைபெறும் வருடாந்திர உயர்மட்ட ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அப்பாஸ் திட்டமிட்டிருந்தார்.

பிரித்தானியா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகியவை பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதாக உறுதியளித்துள்ள அங்கு நடைபெறும் ஒரு உச்சிமாநாட்டிலும் அவர் கலந்து கொள்ளவிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்காவின் விசா முடிவால் அதிர்ச்சியடைந்த அப்பாஸின் அலுவலகம், இந்த நடவடிக்கை ஐ.நா.வின் “தலைமையக ஒப்பந்தத்தை” மீறுவதாகக் கூறியது.

Post a Comment

0 Comments