
கையடக்க தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ள ராஜித சேனாரத்ன வீட்டிலிருந்தும் வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரை கைதுசெய்வதற்கு பல முறை முயற்சி எடுக்கப்பட்டள்ளது.
சட்டவிரோதமான முறையில் கிரிந்த கடற்றொழில் துறைமுகத்தில் மண் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனமொன்றிற்கு வழங்கியதன் ஊடாக அரசிற்கு 262 இலட்சம் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொட்ரபில் ராஜித சேனாரத்ன மேல் நீதிமன்றில் முன்பிணை கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சட்டத்தரணி ஊடாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வேண்டுமென ராஜித சேனாரத்னவிற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் வருகை தராத காரணத்தினால் அவரை கைதுசெய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலமொன்றை வழங்குமாறு பல தடவைகள் அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் போலி காரணங்களை தெரிவித்து அவர் ஆணைக்குழுவில் ஆஜராகுவதை தவிர்த்து வந்ததாக தெரியவந்துள்ளது.



0 Comments