
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ அரசமுறை விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி முதலாவதாக அமெரிக்காவில் நிவ்யோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக் கொள்ளவுள்ளதுடன்,அதனைத் தொடர்ந்து ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி ஜப்பான் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இதன்போது நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 Comments