Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து மனம் திறந்தார் பிமல் ரத்நாயக்க...!



தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளதாகப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நானுஓயா ரயில் நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது “தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது தொடர்பாக தோட்டத் தொழில்கள் அமைச்சகமும் நிதி அமைச்சகமும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்காலத்தில் இலாபகரமான டிப்போக்களுக்கு போனஸ் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments