உலகளவில் தங்கத்திற்கு புகழ் பெற்ற துபாயில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராமுக்கு 400 திர்ஹம்ஸை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மேலும் முதல்முறையாக வரலாறு காணாத அளவுக்கு தங்கத்தின் விலை உயர்ந்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
துபாய் ஜூவல்லரி குரூப் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 24 காரட் தங்கம் 432.25 திர்ஹம்ஸ்க்கும், அதே நேரத்தில் 21 காரட் மற்றும் 18 காரட் தங்கம் முறையே கிராமுக்கு 383.75 திர்ஹம்ஸ் மற்றும் 328.75 திர்ஹம்ஸ்க்கும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
துபாயில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு கூர்மையான ஏற்றத்தைக் கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 24 காரட் தங்கம் விலையைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் முதல் கிராமுக்கு 116 திர்ஹம்ஸ் வரை உயர்ந்து, 316.25 திர்ஹம்ஸிலிருந்து தற்போது, 432.25 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 22 காரட் தங்கம் 107.25 திர்ஹம்ஸ் அதிகரித்துள்ளது.
இவ்வாறு கிடுகிடுவென ஏறும் விலையால், வாடிக்கையாளர்களாகிய மக்கள் மத்தியில் தங்க நகைகள், நாணயங்கள் மற்றும் ஆபரணங்களுக்கான ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது, இருப்பினும், பண்டிகைகள் மற்றும் வரவிருக்கும் திருமண சீசன் விற்பனையை அதிகரிக்கும் என்று நகைக்கடைக்காரர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.

தங்கம் விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன?
அமெரிக்காவின் பலவீனமான வேலைவாய்ப்புத் தரவுகள் அமெரிக்க பெடரல் ரிசர்வ், விரைவில் வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், ஐக்கிய அரபு அமீரகம் உட்பட உலகளவில் தங்கத்தின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்தன.
ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் 22,000 வேலைகளை மட்டுமே சேர்த்தது, மேலும் வேலையின்மை விகிதம் 4.3% ஆக உயர்ந்தது, இது 2021 க்குப் பிறகு மிக அதிக உயர்வாகும். இந்த பலவீனமான செயல்திறன் வேலைச் சந்தை மெதுவாகி வருவதைக் குறிக்கிறது, இந்த சமயத்தில் வளர்ச்சியை ஆதரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களைக் குறைக்கும்
இதன் விளைவாக, ஸ்பாட் தங்கம் 1% அதிகரித்து $3,586.76 ஆக உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் பலவீனமான வேலைவாய்ப்புத் தரவு மலிவான கடன் செலவுகளுக்கான நம்பிக்கையை அதிகரித்தது, இதன் தாக்கமே தங்கத்தின் விலையை நாளுக்கு நாள் உயர்த்துவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

0 Comments