Trending

6/recent/ticker-posts

விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறும் மஹிந்த தொடர்பில்...! ( Video)



முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இன்றைய தினம் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம இல்லத்திலிருந்து வெளியேறுவார் என பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்டம் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு. சபாநாயகரினால் சான்றுபடுத்தப்பட்டது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்டகாலமாக குடியிருந்த விஜேராம இல்லத்திலிருந்து இன்று வெளியேறவுள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் அவர் தங்குவதற்கான சாத்தியங்களே பெருமளவில் காணப்படுவதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Post a Comment

0 Comments