
காலியில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று திங்கட்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இந்த இளைஞனுக்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments