
அரச வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கு எதுவித தட்டுப்பாடுகளும் இல்லையெ சுகாதார, ஊடகத்துறை பிரதி அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜயமுனி தெரவித்தார்.
கண்டி செயலக கேட்போர்’ கூடத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர், தற்போது அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு கிடையாது. அதேபோன்று செயற்கையாகப் பொருத்தப்படும் கண் வில்லைகளுக்கும் தட்டுப்பாடுகள் கிடையாது. ஆனால், சிலர் குறிப்பிட்ட கம்பனிகளது பொருட்களை மட்டும் தேடும்போது அவை திறந்த சந்தைகளில் இல்லாமல் இருக்கலாம். நாம் குறிப்பிட்ட சில ரகங்ளை மட்டுமே வைத்தியசாலைகளுக்கு வழங்குகிறோம்.
மேலும், புதிதாக வைத்தியர்களுக்கான நியமனங்களும் வழங்கப்படவுள்ளன. அவை அந்தந்த பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களால் வெற்றிடம் உள்ளதாக தரப்பட்ட தரவுகளின் படியே வழங்கப்படுகின்றன. மாறாக நாம் அரசியல் ரீதியில் தலையீடுகள் மேற்கொள்வதில்லை. சில உயரதிகாரிகள் சரியான தகவல்களை எமக்கு பெற்றுத் தருவதில்லை. இதனால், குறிப்பிட்ட சிலர் நீண்டகாலம் ஒரே இடத்தில் பணியாற்றும் நிலை காணப்படுகிறது. தமக்குறிய பொறுப்புக்களை மீறுவோர் அல்லது சம்பந்தமில்லாத விடயங்களில் தலையிட்டு பிரச்சினைகளை உருவாக்கும் உயரதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்தார்.
0 Comments