
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது சீனப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (01) தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
ச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தனது உரையைப் பயன்படுத்தி பயங்கரவாதம் குறித்து ஒரு கூர்மையான செய்தியை வழங்கினார்.
அதில் பயங்கரவாத அமைப்புகளுக்கு “சில நாடுகள்” வழங்கும் வெளிப்படையான ஆதரவை இனியும் பொறுத்துக்கொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
சீனாவின் தியான்ஜினில் நடைபெறும் 25 ஆவது SCO உச்சி மாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார்.
இதன்போது தனது உரையினை உறுதியாக வெளிப்படுத்திய பிரதமர் மோடி, “பயங்கரவாதம் எந்த ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் அச்சுறுத்தலாகும்” என்று அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அண்மையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியா நான்கு தசாப்தங்களாக “பயங்கரவாதத்தின் தாக்குதலை” அனுபவித்து வருவதாகவும், புது டெல்லியின் போராட்டத்தில் துணை நின்ற பங்காளி நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
அத்துடன், பயங்கரவாதம் தொடர்பாக எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகவும் ஒருமனதாகவும் கூற வேண்டும்.
இந்தத் தாக்குதல் (பஹல்காம்) மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு நாட்டிற்கும், நபருக்கும் ஒரு வெளிப்படையான சவாலாக இருந்தது.
இதுபோன்ற சூழ்நிலையில், சில நாடுகள் பயங்கரவாதத்தை வெளிப்படையாக ஆதரிப்பது நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்ற கேள்வி எழுவது இயல்பானது.
பயங்கரவாதத்தை எந்த வடிவத்திலும் நாம் ஒருமனதாக எதிர்க்க வேண்டும் – என்றார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டினை அடுத்து பிரதமர் மோடி, இந்தியா திரும்புவதற்கு முன்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடம் சந்திப்பில் ஈடுபட்டார்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் பெய்ஜிங்கில் ஒரு பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, வடக்கு துறைமுக நகரமான தியான்ஜினில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 01) SCO உச்சிமாநாடு தொடங்கியது.
நேற்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன், மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும், மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு மற்றும் மியான்மர் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் ஆகியோரையும் சந்தித்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 Comments