Trending

6/recent/ticker-posts

Live Radio

மாணிக்கக்கல் தோண்டிய ஐந்து பேர் கைது...!



காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீரை பெறும் பிரதான நீரேந்து பகுதியான கெசல்கமு ஓயாவை அண்மித்த கரை பகுதியில் அனுமதியின்றி குழிகள் தோண்டி சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்ந்ததாக சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் பொகவந்தலாவ பொலிஸாரால் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் ஹட்டன், நோர்வுட் மற்றும் பொகவந்தலாவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இரத்தினக்கல் அகழ்ந்தெடுக்கப் பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் இரத்தினக்கல் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments