
உலக நீர்விளையாட்டு மற்றும் ஆசிய ஒலிம்பிக் சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் ஹுசைன் அல் முசல்லம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு, இன்று (8) பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது, விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு அரசாங்கத்திற்கும் விளையாட்டுத் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை கேப்டன் ஹுசைன் அல் முசல்லம் வலியுறுத்தினார்.
மேலும், தற்போதுள்ள விளையாட்டுச் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதின் அவசியத்தையும், தேவையான புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டியதன் தேவையையும் எடுத்துரைத்தார்.
0 Comments