
வருடாந்தம் செப்டம்பர் 29 ஆம் திகதி, உலக இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களிலிருந்து பாதுகாப்பு பெறும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒவ்வொரு இதயத்துடிப்பும் முக்கியம். எந்த இதயத்துடிப்பையும் முன்கூட்டியே இறக்க விடாதீர்கள்’ என்பதே இம்முறை உலக இதய தினத்தின் தொனிப்பொருளாகும்.
உலகளவில் இதய நோயால் ஏற்படும் இறப்புகளில் 80 சதவீதம் தடுக்கக்கூடியவை என்பது வருத்தமளிக்கும் விடயம் என்று இலங்கை இருதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.
உலக இதய தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் உள்ள விஹாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
தடுக்கக்கூடிய இதய மரணங்களைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதே உலக இதய தினத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று வைத்திய நிபுணர் வலியுறுத்தினார்.
எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார். உடற்பயிற்சி, நல்ல உணவுமுறை, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது மற்றும் மன அழுத்த செயல்களைத் தவிர்ப்பது இதயத்தை பாதுகாப்பதற்கு உதவுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



0 Comments