
நோயாளிகளை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (18) காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை பிரதேச வைத்தியசாலையிலிருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.
அம்பியூலன்ஸ் வண்டி லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்தில் அம்பியூலன்ஸ் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தினையடுத்து நோயாளிகள் இருவரும் வேறு அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments