
தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது. முதன்முறையாக தங்கத்தின் விலை 3950 அமெரிக்க டொலரை கடந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய உள்நாட்டில் தங்கத்தின் விலை மேலும் 8000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையின் விலை நிலவரப்படி 22 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை குறித்த விலைப் பெறுமதி 283,000 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை கடந்த சனிக்கிழமை காணப்பட்ட 24 கெரட் ஒரு பவுண் தங்கத்தின் விலையான 306,000 ரூபா இன்றைய தினத்தில் 314,000 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.



0 Comments