
காசாவில் இரண்டு வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக திங்களன்று (13) இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் ஒரு பெரிய பணயக்கைதிகள் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தைக் கொண்டாடினர்.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் மத்தியஸ்த திட்டத்தின் ஒரு முக்கியமான முதல் கட்டத்தில், ஹமாஸ் அனைத்து உயிருடன் உள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது.
அதேநேரத்தில் இஸ்ரேல் சுமார் 2,000 பாலஸ்தீனிய கைதிகளை விடுவித்தது.
இஸ்ரேலிய பணயக்கைதிகளின் குடும்பத்தினர் விடுவிக்கப்பட்ட தங்கள் அன்புக்குரியவர்களை அரவணைத்து மகிழ்ச்சியுடன் கதறி அழுதது உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தன.
இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பாலஸ்தீனியர்களுக்காக, காசா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பேருந்துகளில் வந்தடைந்தபோது, மக்கள் கொடிகளை அசைத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.



0 Comments