
பல அமைச்சுக்களின் நோக்கெல்லைகள், செயல்பாடுகள், துறைகள், சட்டரீதியான அமைப்புகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களை திருத்தி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்தால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்துடன் இணைந்து இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்தத் திருத்தங்களின்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறையும், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இருந்த மறுவாழ்வுப் பணியகமும் நீக்கப்பட்டுள்ளன.



0 Comments