Trending

6/recent/ticker-posts

Live Radio

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்

 அரசாங்கத்தினால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்ட 8 மாதங்களுக்கு பின்னர் உள்ளூர் சந்தையில் வாகன விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஆகின்றது. ஜனவரி 28 திகதி, 5 ஆண்டுகளுக்குப் பின்னர், வாகன இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து புதிய வாகனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்பட்ட நிலையில், வாகன விலைகள் வேகமாக அதிகரித்து காணப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மக்கள் வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகின்றது.


 

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Price Of Vehicles In Sri Lanka

வாகனங்களின் விலை

உள்ளூர் சந்தையில் ரூ.10 மில்லியன் மதிப்புள்ள வாகனங்களின் விலை தற்போது சுமார் ரூ.5 மில்லியனாகவும் , ரூ.20 லட்சம் விலை விற்கப்படும் வாகனங்களின் விலைகள் ரூ.1.5-1.0 லட்சம் வரை குறைந்துள்ளதாகவும்  விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கை சந்தையில் வாகனங்களுக்கான பெரிய இடைவெளி இருந்ததாகவும், தற்போது அது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய வாகனங்களை வாங்க தயங்கும் இலங்கையர்கள் : விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் | Price Of Vehicles In Sri Lanka

மக்கள் வாகனங்களை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமையே “ஜப்பானில் வாகன ஏலங்களில் விலைகள் குறைந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகின்றது.

ஜப்பானில் இருந்து இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்படல் வேண்டும் என்ற சட்டம் எதிர்காலத்தில் வாகன இறக்குமதியாளர்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்



Post a Comment

0 Comments