
அனுராதபுரம், தலாவ, ஜெயகங்கா சந்திப்பில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் பள்ளி குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் - தலாவ வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தம்புத்தேகம, ஜெயகங்கா பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் ,உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



0 Comments