
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தந்தையின் மறைவையொட்டி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (09) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
பொரளையில் அமைந்துள்ள தனியார் மலர்சாலையில் அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்தது. அதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.



0 Comments