Trending

6/recent/ticker-posts

Live Radio

நீச்சல் குளத்தில் ஐந்து வயது சிறுவன் உயிரிழப்பு...!



களனி, தளுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன், சிகிரியா பொலிஸ் பிரிவின் அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று(08) மாலை சிறுவன் தனது பெற்றோருடன் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவன் உடனடியாக தம்புள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான்.

சடலம் தம்புள்ள மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து சிகிரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments